fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈராக் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ISIS பயங்கரவாதிகள் 19 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 15:02

ஈராக் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ISIS பயங்கரவாதிகள் 19 பேர் பலி

ஈராக் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஐளுஐளு பயங்கரவாதிகள் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். டியாலா மாகாணத்தின் மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியை திடீரென சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது பயங்கரவாதிகளின் 13 பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 15:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க