fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவை வழங்குவதற்கென மதிப்பீட்டு மத்திய நிலையம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 13:00

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவை வழங்குவதற்கென மதிப்பீட்டு மத்திய நிலையம்

முகாமைத்துவம் மற்றும் மதிப்பீடு செயற்பாடுகளை முறைப்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவை வழங்குவதற்கென மதிப்பீட்டு மத்திய நிலையம் ஒன்று இலங்கை பாராளுமன்றத்திற்குள் வெகு விரைவில் ஸ்தாபிக்கப்படுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகததின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கைத்தொழில் கல்வி துறையின் கைத்தொழில் மற்றும் புத்தாக்க மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்று ஆரம்பித்த முதலாவது கைத்தொழில் மற்றும் புத்தாக்க மத்திய நிலையம் இதுவாகும். 218/1 ஹைலெவல் வீதி பன்னிபிடிய எனும் முகவரியில் இந்த மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

புதிய வர்த்தக முயற்சியொன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ள கைத்தொழிலாளர்களுக்கு இதன்மூலம் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். இம்மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டமையை தொடர்ந்து புதிய ஏழு வர்த்தக முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. அத்துடன் செபனி டொட் எல்.கே எனும் இணையத்தளமும் உபவேந்தரினால் திறந்து வைக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 13:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க