fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சவுதி பெண்களுக்கு ஆண் துணையின் அனுமதியின்றி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளகூடியவாறு சட்டம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 12:52

சவுதி பெண்களுக்கு ஆண் துணையின் அனுமதியின்றி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளகூடியவாறு சட்டம்

சவுதி அரேபிய பெண்களுக்கு ஆண் துணையின் அனுமதியின்றி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளகூடியவாறு சட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சட்டத்திற்கு அமைய 21 வயதை தாண்டிய பெண்களுக்கு ஆண் பொறுப்பாளரின் அனுமதியின்றி வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன் குழந்தை பிறப்பு, திருமணம் அல்லது விவாகரத்து போன்றனவற்றை பதிவு செய்யும் உரிமையும் அவர்களுக்கு கிடைக்கின்றது. இதன்மூலம் பெண்களுக்கு தொழில்வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பங்கள் விஸ்தரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை காலமும் சவுதி அரேபிய பெண்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்று கொள்வதற்கு ஆண் பொறுப்பாளரின் அனுமதியை பெற வேண்டியிருந்தது. புதிய சட்டத்தின் கீழ் ஆண் பெண் வேறுபாடு இன்றி சவுதி அரேபிய பெண்களுக்கும் சமவுரிமை கிடைக்கின்றது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க