கம்பஹா மாவட்டத்தை கேந்திரமாக கொண்டு இம்முறை இந்நிகழ்ச்சி திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் 13 பிரதேச செயலக பிரிவுகளையும் கேந்திரமாக கொண்டு பல்வேறு நிகழச்சி திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் கடந்த ஆண்டு 11 ஆயிரத்து 354 திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன.
இத்திட்டங்களை மேலும் செயற்திறனுடன் மேற்கொள்ளும் பணிகள் நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக அரசாங்கம் 15 ஆயிரம் மில்லியனுக்கும் கூடுதலான நிதியை ஒதுக்கியுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் கிராம எழுச்சி மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் நாட்டில் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 5ம் திகதி வரை நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சி திட்டம் கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.