fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடமத்திய மாகாணங்களில் குளங்களை புனரமைக்கும் சுஹூரு நீர்பாசன திட்டம் பிரதமரினால் அங்குரார்ப்பணம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 12:46

வடமத்திய மாகாணங்களில் குளங்களை புனரமைக்கும் சுஹூரு நீர்பாசன திட்டம் பிரதமரினால் அங்குரார்ப்பணம்

மகவிலச்சிய மெதஓயா மடுவ குளத்தை புனரமைக்கும் பணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

நீர்பாசன மற்றும் விவசாய அமைச்சின் வழிகாட்டலில் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் மெதஓயா மடுவ குளத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கென 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மெதஓயா மடுவ குளத்தின் அணைக்கட்டை புனரமைத்தல், வேலியமைத்தல், சேற்றை அப்புறப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் இதன்கீழ் இடம்பெறுகின்றன. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாய குடும்பங்கள் இதன்மூலம் நன்மையடையவுள்ளன.

அத்துடன் மெதஓயா மடுவ குளத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் அட்டமஸ்தானாதிபதி சங்கைக்குரிய பல்லேக ஸ்ரீநிவாச தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் அமைச்சர்களான, பி.ஹெரிசன், கயந்த கருணாதிலக்க, சந்திராணி பண்டார உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 12:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க