நபர் ஒருவரை தாக்கி அவரை சட்டவிரோதமாக தடுத்து வைத்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பிரிவின் சட்டம் அமுல்படுத்தல் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொண்ட சுற்றி வளைப்பிலேயே இம் மூவரும் கைது செய்யப்பட்டனர. பண்டாரகம கொஸ்வத்த பகுதியில் நபர் ஒருவர் மீ’து தாக்குதல் நடத்தப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பிரகாரமே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நபரை கடத்திய 2 சந்தேக நபர்களும் அதற்காக பயன்படுத்தப்பட்ட வேனின் சாரதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வேனும் பொலிஸாரால் கைப்பறறப்பட்டுள்ளது. காயமடைந்த நபர் தான் பணியாற்றிய இடத்தில் பணத்தை திருடியமைக்காக அவரது கடையின் உரிமையாளர் குறித்த நபரை கடத்தி தடுத்து வைத்திருந்துள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
