அமெரிக்க – சீன வர்த்தக போரை முடிவிற்கு கொண்டுவரும் வகையில் முக்கிய பேச்சுவார்த்தை
Related Articles
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே வர்த்தக போரை முடிவிற்கு கொண்டுவரும் வகையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருநாடுகளையும் சேர்ந்த வர்த்தக துறை அதிகாரிகள் குறித்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.