மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழப்பு 0
கம்பளை பகுதியில் மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். வன விலங்குகள் வயலுக்குள் நுழைவதை தடுக்க மின்சார இணைப்புடைய வேலியை அமைக்க முற்பட்ட போதே குறித்த நபர் மின் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளார். அவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மில்லகஹாமுல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம்