fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விளையாட்டுப் பயிற்சியில் ஈடபட்ட பாடசாலை மாணவன் மயக்கமுற்ற நிலையில் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2019 15:49

விளையாட்டுப் பயிற்சியில் ஈடபட்ட பாடசாலை மாணவன் மயக்கமுற்ற நிலையில் உயிரிழப்பு

விளையாட்டுப் பயிற்சியில் ஈடபட்ட பாடசாலை மாணவன் ஒருவன் மயக்கமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் கம்பஹா, சப்புகஸ்கந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவன் பாடசாலை மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டபோது திடீர் மயக்கமுற்கு கீழே வீழ்ந்துள்ளான்.

இதனையடுத்து மாணவனை கிரிபத்கொடையில் உள்ள அரச வைத்தியசாலைக்கு கொண்டும் செல்லும் வேளையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 17 வயதையுடைவரென பொலிசார் தெரிவித்துள்ளனர். மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிரிபத்கொட அரச வைத்தியாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கம்பஹா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2019 15:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க