மத்திய தபால் பரிமாற்று நிலைய போதைப்பொருள் விவகார பிரதான சந்தேக நபரை கைதுசெய்ய நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2019 15:45

மத்திய தபால் பரிமாற்று நிலைய போதைப்பொருள் விவகார பிரதான சந்தேக நபரை கைதுசெய்ய நடவடிக்கை

மத்திய தபால் பரிமாற்றகத்தில் கைப்பற்றப்பட்ட போதைவில்லைகளைக் கடத்திய பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

15 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று, மத்திய தபால் பரிமாறறு நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இதன்போது எக்ஸ்டசி வகையைச் சேர்ந்த மூவாயிரத்து 50 போதைவில்லைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டன. போர்த்துக்கல்லிருந்து குறித்த பொதி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பிரதான சந்கேநபரின் உதவியாளர் என்பதுடன், போதைவில்லைகள் அடங்கிய பொதியைப் பெற்றுக் கொள்வதற்காக வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு – 14 ஐ சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2019 15:45

Default