fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச ஊழியர்களுக்கு மலிவு அட்டையொன்றை வழங்கும் வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2019 15:43

அரச ஊழியர்களுக்கு மலிவு அட்டையொன்றை வழங்கும் வேலைத்திட்டம்

அரச ஊழியர்களுக்கு மலிவு அட்டையொன்றை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. சதொச ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யும்போது மலிவு விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த விசேட அட்டை வழங்கப்படவுள்ளது. இதனூடாக அதிகளவானோர் நன்மையடைவார்களென இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார். மலிவு அட்டை வழங்கும் முதற்கட்ட நடவடிக்கையை ஓகஸ்ட் மாதம் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உத்தியோகப்பூர்வ நிகழ்வுக்கு 25 மாவட்டங்களிலிருந்து தலா 10 அல்லது 20 பேர் அழைக்கப்பட்டு, குறித்த மலிவு அட்டை வழங்கப்படும். குறித்த மலிவு அட்டை முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன சுட்டிக்காட்டினார். அரச ஊழியர்கள் மாத்திரமன்றி, அரசாங்கத்தால் இயக்கப்படுகின்ற நிறுவனங்களில் தொழில்புரிகின்ற ஊழியர்களுக்கும், அரை அரச நிறுவன ஊழியர்களுக்கும் குறித்த மலிவு காட் அட்டை வழங்கப்படவுள்ளது.

நாட்டில் முப்படை, பொலிஸார் உள்ளடங்களாக 14 இலட்சத்து 90 ஆயிரம் பேர் அரச ஊழியர்களாக உள்ளனர். அதேபோல் அரை அரச நிறுவனங்களில் இரண்டரை இலட்சம் பேர் வரை உள்ளனர். அதேபோல் ஓய்வூதியம் பெறுகின்ற 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். அதேபோல் அரை அரச நிறுவனங்களிலிருந்து ஓய்வுபெற்றோர்களும் உள்ளனர். எனவே சுமார் 25 இலட்சம் பேருக்கு சதொச ஊடாக பொருட்களை மலிவு விலையில் கொள்வனவு செய்வதற்கு குறித்த மலிவு அட்டை இலவசமாக வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2019 15:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க