fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரித்தானிய கழிவுப்பொருள் அடங்கிய கொள்கலனை நாட்டின் வேறெந்த பகுதிக்கும் கொண்டுசெல்ல நீதிமன்றம் இடைக்கால தடை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2019 15:36

பிரித்தானிய கழிவுப்பொருள் அடங்கிய கொள்கலனை நாட்டின் வேறெந்த பகுதிக்கும் கொண்டுசெல்ல நீதிமன்றம் இடைக்கால தடை

பிரித்தானியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாட்டின் வேறு எந்த பகுதிக்கும் கொண்டுசெல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ம் திகதி வரை இத்தடை அமுலில் இருக்கும்.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி யசந்த கோதாகொட மற்றும் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் இவ்வுத்தரவை பிறப்பித்தனர். நீதிமன்ற தீர்ப்பின்படி கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்தில் வைக்கப்பட்டுள்ள குறித்த கழிவு கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்ய மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் நீதி மையம் இது தொடர்பில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணை செய்யவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. அதற்கமைய மனுவின் பிரதிவாதிகளுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பிரதிவாதிகளாக சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, சட்டமா அதிபர் மற்றும் ஹேலிஸ் ப்ரீசோன் நிறுவனம் ஆகிய தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2019 15:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க