தபால் திணைக்களத்திற்கு புதிய இலட்சினையை அறிமுகப்படுத்துவதற்கு யோசனைகள் பெறப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பொதுமக்களிடம் யோசனைகளைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை பொதுமக்கள் யோசனைகளை முன்வைக்கமுடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது குருவியொன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலட்சினை பயன்படுத்தப்படுகிறது. அதனை குருவி பறப்பதைப் போன்று மாற்றம் செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.