பாடசாலை மாணவர்களுக்கான 2ம் தவணை விடுமுறை நாளை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2019 15:23

பாடசாலை மாணவர்களுக்கான 2ம் தவணை விடுமுறை நாளை

பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை வழங்கப்படவுள்ளது. இதற்கமைய அரச தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சை நிறைவடையும் வரை குறித்த தடை அமுலில் இருக்கும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகள் நடாத்தப்படும் பட்சத்தில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2019 15:23

Default