ஆப்கானிஸ்தானில் 2019 ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களைவிட ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட மக்கள் தொகையே அதிகம் என ஐக்கிய நாடுகள் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தாலிபன் படையினருக்கு எதிராக அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்திவரும் வேளையில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான இந்த புள்ளிவிவரத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த காலகட்டத்தில் தீவிரவாதிகளால் 631 பேர் கொல்லப்பட்டனர் என்றும், அதேவேளையில் 717 குடிமக்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.