இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியை நுவான் குலசேகரவுக்கு அர்ப்பணிக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள நுவான் குலசேகரவை கௌரவிக்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.