தாயும் மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 30, 2019 15:39

தாயும் மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

கிளிநொச்சி ஜயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 74 வயதான தாயும், அவரது 34 வயதான மகனுமே இவ்வாறு கொலையுண்டுள்ளனர்.

சடலங்களின் தலையில் காயங்கள் காணப்படுவதாக தெரிவித்த பொலிஸார் நீதவான் விசாரணையின் பின்னர் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படுமென அறிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 30, 2019 15:39

Default