மது போதையில் வாகனங்கள செலுத்துவதற்கான நடவடிக்கை நாடு முழுவதிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமான இந்த நடவடிக்கையில் நேற்றைய தினம் காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்குள் மது போதையில் வாகனங்களை செலுத்திய 212 சாரதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே வேளை இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட 5 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையில் 6136 சாரதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

மது போதையில் வாகனங்களை செலுத்திய 6136 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை
படிக்க 0 நிமிடங்கள்