பிரதமர் மோடி காட்டில் பயணம் செய்த வீடியோவினை பிரபல தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சியான மேன் vs வைல்ட் தொகுப்பாளர் பகிர்ந்துள்ளார். இந்த பிரபலமான நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துக் கொண்டு காட்டுக்குள் பியர் கிரில்சுடன் பயணித்துள்ளார். இது குறித்து பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில், ‘180 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு பிரதமர் மோடி குறித்து தெரியப்போகிறது. விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வனப்பகுதிக்கு சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும்’ என பதிவிட்டுள்ளார்.
PC : India Today