fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நல்லூர் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2019 15:03

நல்லூர் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த  திருவிழாவை முன்னிட்டு, காளாஞ்சி கையளிக்கும் வழிப்பாட்டு நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாவதை முன்னிட்டு வள்ளியம்மை திருக்கல்யாண வழிப்பாட்டினல் திருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டப்பட்டது.
பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலையுடன் திருவிழாவுக்கான அழைப்புப் பத்திரிகை நல்லூரிலிருந்து மாட்டுவண்டி மூலம் கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். திருவிழா 25 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2019 15:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க