fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பங்களதேஷ் அணிக்கெதிரான வெற்றியுடன் ஒருநாள் போட்டிகளுக்கு விடைகொடுத்தார் லசித் மாலிங்க

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2019 14:18

பங்களதேஷ் அணிக்கெதிரான வெற்றியுடன் ஒருநாள் போட்டிகளுக்கு விடைகொடுத்தார் லசித் மாலிங்க

இலங்கை – பங்களதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய நிறைவடைந்த 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்றது இலங்கை அணி. குஷல் ஜனீத் பெரேரா 111 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதற்கமைய 315 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களதேஷ் அணி 41.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களையே பெற்றது. இதற்கமைய இலங்கை அணி 91 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக குஷல் ஜனீத் பெரேரா தெரிவானார்.

இந்நிலையில் நேற்றைய ஒருநாள் போட்டியுடன் சர்வதேச அரங்கிலிருந்து வெளியேறினார் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க. இவரை வாழ்த்தும் விதமாக நாட்டினுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மைதானத்திற்கு வருகை தந்திருந்ததோடு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்ற உறுப்பினர் திலங்கசுமதி பால , நிரோஷன் பெரேரா மற்றும் முன்னாள் இலங்கை அணி வீரர்கள் பலரும் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர். போட்டியின் முடிவில் கருத்து தெரிவித்த லசித் மாலிங்க இதுதான் ஒய்வு பெறுவதற்கு சரியான தருணமென தெரிவித்துள்ளார். 15 வருடங்களாக இலங்கை அணிக்காக தான் விளையாடிதாகவும் அத்தருணங்களை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் கருதுவதாக தெரிவித்தார். இந்நிலையில் லசித் மாலிங்கவின் இவ் ஓய்வு குறித்து உலகில் கிரிக்கட் வீரர்கள், கிரிக்கட் விமர்சகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் டுவிட்டர் வலைத்தளத்தின ஊடாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2019 14:18

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க