fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

லசித் மாலிங்க இன்றுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2019 15:27

லசித் மாலிங்க இன்றுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

இலங்கை – பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளன. முதலாவது போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கெத்தாராம ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் பகலிரவு ஆட்டமாக ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணி திமுத் கருணாரத்ன தலைமையிலும், பங்களாதேஷ் அணி தமிம் இக்பால் தலைமையிலும் களமிறங்கவுள்ளன.

இதேவேளை இன்றைய போட்டியுடன் லசித் மாலிங்க சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். அவருக்கு பிரியாவிடை வழங்கும் போட்டியாக இன்றைய போட்டி அமையவுள்ளது. இலங்கை அணிக்காக இதுவரை 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மாலிங்க 335 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

அவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் ஓய்வுபெற்றுள்ள நிலையில், இன்றைய தினத்துடன் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறவுள்ளார். எனினும் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள டுவண்டி – 20 உலக கிண்ண தொடர் வரை இலங்கை அணிக்காக டுவண்டி – 20 போட்டிகளில் விளையாடவுள்ளதாக லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2019 15:27

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க