fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பரீட்சை வினாத்தாள்களை திருடிய மஸ்கெலியா மாணவர்கள் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2019 15:20

பரீட்சை வினாத்தாள்களை திருடிய மஸ்கெலியா மாணவர்கள் இருவர் கைது

பரீட்சை வினாத்தாள்களை திருடியமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் இருவர் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். மஸ்கெலியா பகுதியிலுள்ள தமிழ் வித்தியாலயத்தில் பரீட்சை வினாத்தாள்களை மாணவர்கள் திருடியுள்ளனர். மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் அச்சிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டிருந்த இரண்டாம் தவணைக்கான பரீட்சை வினாத்தாள்கள் குறித்த பாடசாலையின் அதிபர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. பொதி உடைக்கப்பட்டு பரீட்சை வினாத்தாள்கள் திருடப்பட்டுள்ளதாக அதிபர் நேற்றையதினம் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதிபர் அலுவலகத்திலுள்ள ஜன்னல் வழியாக நுழைந்து பரீட்சை வினாத்தாள்களை மாணவர்கள் திருடியுள்ளனர். அதே பாடசாலையை சேர்ந்த மாணவர்களே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை மாணவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2019 15:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க