அண்மையில் வீசிய கடும் காற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்போது நட்டஈடு வழங்கப்பட்டு வருகின்றன.
புத்தளம் மாவட்டத்தில் கடும் காற்றினால் 340 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக பாதிக்கபபட்ட குடும்பங்களுக்கு முற்பணமாக தலா 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. இதன் பிரகாரம் மாதம்பே பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் வைபவம் மாதம்பே பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. மதிப்பீட்டு அறிக்கை கிடைத்ததை தொடர்ந்து முழுமையான நட்டஈடு வழங்கப்படுமென புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம்.சித்ராநந்த தெரிவித்தார்.