fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய அமைச்சரவையை சந்திக்க தயாராகும் போரிஸ் ஜோன்ஸன்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 25, 2019 13:02

புதிய அமைச்சரவையை சந்திக்க தயாராகும் போரிஸ் ஜோன்ஸன்

பிரிட்டனின் புதிய பிரதமராக நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட கென்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான பொரிஸ் ஜோன்சன் இன்று தனது புதிய அமைச்சரவையை சந்திக்கவுள்ளார்.

புதிய பிரதமரான பொரிஸ் ஜோன்சன் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்துவதற்கு முன்னர் அமைச்சரவை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். புதிய பிரதமரின் பதவியேற்பை தொடர்ந்து புதிய அமைச்சரவை நேற்று அமைக்கப்பட்டது. பிரிட்டனின் பிரக்ஸிட் ஒப்பந்தத்திற்கு வழி வகுத்த முக்கிய பிரதிநிதிகள் சிலரும் புதிய அமைச்சரவையில் உள்வாங்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் தெரேசா மேயின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அரைவாசி பேர் புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக பிரக்ஸிட் ஒப்பந்தத்திற்கு சார்பானவர்கள் அமைச்சரவையில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதனால் புதிய அமைச்சரவை பல்வேறு விமர்சனங்களுக்குள்வாங்கியுள்ளது. சத்தியபிரமாணத்தை தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய பொரிஸ் ஜோன்சன் பிரக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி அவ் ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமென தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் பிரக்ஸிட் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் முன்னாள் பிரதமர் தெரேசா மேயிற்கு கிடைத்த ஆதரவு புதிய பிரதமருக்கு கிடைக்காதென அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை புதிய பிரதமருக்கு எதிராக பிரட்டனின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 25, 2019 13:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க