மற்றுமொரு மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 25, 2019 12:34

மற்றுமொரு மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு

மற்றுமொரு மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு வழங்கப்பட்டது. திருகோணமலை பட்டினமும் சூழலும் மற்றும் குச்சவெளி பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பாபநாசபுரம் மற்றும் தொல்காப்பிய நகர் என குறித்த இரு மாதிரி கிராமங்களுக்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றது. சகலருக்கும் நிழல் தேசிய அபிவிருத்தி வீடமைப்பு திட்டத்தின் முதற்கட்டத்தை டிசம்பர் மாதம் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதற்குள் 2 ஆயிரத்து 534 கிராமங்களை மக்களின் உரிமைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாம் கட்டத்தினூடாக 5 ஆயிரம் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 25, 2019 12:34

Default