fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் : வேலுகுமார் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 25, 2019 12:30

பெருந்தோட்ட  தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் : வேலுகுமார் தெரிவிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெருந்தோட்டங்களை  பகிர்ந்தளித்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டுமென இந்துசமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

குறித்த கோரிக்கை உட்பட மலையக மக்களின் உரிமைசார் விடயங்களை முன்னிலைப்படுத்தியே ஜனாதிபதி தேர்தல் ஆதரவு குறித்து கட்சிகள் தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கண்டியை மையமாக கொண்டு இயங்கும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். தேசிய மட்டத்திலான தேர்தல்கள் எதிர்காலத்தில் நடைபெறவுள்ளன. இந்நி               யில் சிறுபான்மை இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் தேசிய கட்சிகள் பேச்சுவார்த்தைகளை நடத்த முற்படும். இதனால் நாம் விழிப்புடனும் மக்கள் சார் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் தயார் நிலையில் இருக்கவேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வலியுறுத்தினார்.

மலையகம் எனும் போது சம்பள பிரச்சினை மாத்திரமே உண்டு என்ற பிம்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. எனினும் அங்கு தீர்க்கப்படவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றாக சம்பள பிரச்சினை காணப்படுகிறது. இந்நிலையில் கூட்டு ஒப்பந்ததத்திற்கு முடிவுகட்ட வேண்டுமென்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இதற்கு மாற்றீடாக பெருந்தோட்டங்களை தோட்டத்தொழிலாளர்களுக்கே பகிர்ந்தளித்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே சிறப்பான தேர்வு என கண்டறிந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவருமான வேலுகுமார் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 25, 2019 12:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo