பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது
Related Articles
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது. இன்றையதினம் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். முற்பகல் 10.30 மணிக்கு தெரிவுக்குழு கூடவுள்ளது. இந்நிலையில் இன்றைய தெரிவுக்குழு விசாரணைகளை நேரடியாக கண்காணிக்க ஊடகங்களுக்கு அனுமதியில்லையென பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.