என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அனுராதபுரத்தில் ஆரம்பமாகவுள்ளது. அனுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மைதானத்தில் எதிர்வரும் 27ம் திகதி வரை கண்காட்சி நடத்தப்படும். நிதியமைச்சு கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
முற்பகல் 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட முடியும். என்டப்பிரைசஸ் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் முழுமையான தகவல்களை கண்காட்சி பூமியில் பெற்றுக்கொள்ள முடியும். நிவாரண கடன் திட்டம், புதிய தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள் உட்பட பல்வேறு சேவைகளும் வழங்கப்படவுள்ளன. வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளோருக்கு, கல்வி சான்றிதழ்களை பெற்று வெளிநாட்டு அமைச்சில் உறுதிசெய்வதற்கான வசதிகளும் கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி மற்றும் வெளிவிவகார அமைச்சின் விசேட பிரிவுகள் இதற்காக செயற்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.