காலி ஹினிதும பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். பட்டஹேன பிட்டிகல வீதியின் வட்டோவிட்ட பாலத்திற்கருகில் முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.