சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் பிராந்தியத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் சாதாரண பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. ரஷ்யாவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிரியாவின் விமானப்படை விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.