fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை புதிய யாப்புக்கான யோசனைகள் உள்ளடங்கிய பிரேரணை இன்று பாராளுமன்றத்தில்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2019 13:03

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை புதிய யாப்புக்கான யோசனைகள் உள்ளடங்கிய பிரேரணை இன்று பாராளுமன்றத்தில்

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை புதிய யாப்புக்கான யோசனைகள் உள்ளடங்கிய பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்த்தன, குமார் சங்கக்கார, ரொஷான் மஹாநாம, சிதத் வெத்தமுனி ஆகியோரின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளுக்கமைய குறித்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதேவேளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறைவேற்று குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரவுக்கு ஓய்வுபெறுவதற்கான போட்டியொன்றை வழங்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் த சில்வா தெரிவித்தார். இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2019 13:03

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க