fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக மாலிங்க அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2019 13:02

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக மாலிங்க அறிவிப்பு

பங்களாதேஷ் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இதுதொடர்பில் பதிவிட்டுள்ளார்.

எதிர்வரும் 26ம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியுடன் தான் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுக்கவுள்ளதாக லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். எனினும் 2020 உலகக்கிண்ண டுவெண்டி – 20 தொடர் வரை தான் டுவெண்டி – 20 போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2019 13:02

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க