fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2019 12:48

ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இதுகுறித்தான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி இடம்பெறுமென கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தது. பிணை வழங்கியமைக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குறித்த மீளாய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த இருவரையும் பிணையில் விடுவிக்குமாறு கடந்த ஜுலை மாதம் 9ம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவை மீளாய்வு செய்து அதற்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் இன்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2019 12:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க