fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரித்தானிய புதிய பிரதமர் நாளை கடமைகளை பொறுப்பேற்பாரென அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2019 12:35

பிரித்தானிய புதிய பிரதமர் நாளை கடமைகளை பொறுப்பேற்பாரென அறிவிப்பு

புதிய பிரதமர் நாளை முதல் தனது கடமைகளை ஆரம்பிப்பாரென பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பிறிக்ஸிட் விவகாரத்தையடுத்து கடந்த மே மாதம் பதவி விலக தீர்மானித்தார். இதனையடுத்து புதிய பிரதமரை தெரிவுசெய்வதற்கான நடவடிக்கையினை பிரித்தானிய கென்சர்வேட்டிவ் கட்சி முன்னெடுத்துவருகிறது.

அதற்கமைய நேற்றையதினம் இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. மொரிஸ் ஜோன்சன் மற்றும் ஜெரமி ஹன்ட் ஆகியோருக்கிடையில் புதிய பிரதமர் தெரிவில் கடும் போட்டி நிலவுகிறது. அதற்கமைய புதிய பிரதமரை தெரிவு செய்ய கென்சர்வேட்டிவ் கட்சியின் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களித்துள்ளனர்.

இன்றையதினம் வாக்குகள் எண்ணப்பட்டு பெறுபேறு அறிவிக்கப்படவுள்ளது. பெரும்பாலும் மொரிஸ் ஜோன்சன் பிரதமராக தெரிவுசெய்யப்படலாமென நம்பப்படுகிறது. இந்நிலையில் தெரேசா மே தான் பதவி விலகுவதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை நாளையதினம் அவர் பிரித்தானிய மகாராணியிடம் கையளிக்கவுள்ளார்.

இந்நிலையில் அவர் இறுதியாக இன்றையதினம் பிரித்தானிய அமைச்சரவையின் பிரதானியாக செயற்படவுள்ளார். இன்றையதினம் புதிய பிரதமர் குறித்தான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் பிரதமராக தெரிவுசெய்யப்படுகின்றவரை கென்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2019 12:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க