fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

“800” முத்தையா முரளிதரன் திரைப்படம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2019 12:29

“800” முத்தையா முரளிதரன் திரைப்படம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தொடர்பான ஒரு திரைப்படம் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது. இதில் முரளியின் பாத்திரத்தை ஏற்று விஜய் சேதுபதி நடிக்கின்றார். திரைப்படத்தின் பெயர் 800 என குறிப்பிடப்பட்டுள்ளது. முரளியின் ரெஸ்ட் விளையாட்டுத் துறையில் பல முக்கிய சம்பவங்களை இந்தத் திரைப்படம் எடுத்தியம்ப உள்ளது.

டிசம்பர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும். இலங்கை, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் படப்பிடிப்பு இடம்பெறவுள்ளது. 1992 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமாகிய முத்தையா முரளிதரன் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா அணிக்கு எதிராக இடம்பெற்ற ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.

தனது 19 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருநாள் அரங்கில் 534 விக்கெட்டுக்களையும், டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுக்களையும் முரளிதரன் கைப்பற்றியுள்ளார். முரளிதரன் பங்குகொண்ட போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஸ்டீவ் வோக் உள்ளிட்ட பல துடுப்பாட்ட ஜாம்பவான்களை தனது சுழல் பந்து வீச்சு மூலம் மிரட்டியவர் முரளிதரன். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் பட்டியலில் முரளிதரன் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2019 12:29

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க