எல்ரிரிஈ பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்த மனிதாபிமான நடவடிக்கைகளின் அனுபவங்களை அடிப்படையாக வைத்து, ஐரிஎன் ஊடகவியலாளர் சுஜித் விதான பத்திரனவின் எண்ணக்கருவில் உருவான செலியூட் எக்க நூல் வெளியீடு அண்மையில் இடம்பெற்றது.
ஐரிஎன் ஊடகவியலாளர் சுஜித் விதானவின் செலியூட் எக்க நூல் வெளியீட்டு வைபவம் மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில்இ டம்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தாயகத்தை எல்ரிரிஈ பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கும் மனிதநேய போராட்டத்தின் தொடக்கம் முதல் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டது வரை யுத்த களத்தில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை அடிப்படையாக வைத்து, தயாரிக்கப்பட்டுள்ளது.
நூலின் முதலாவது பிரதி யுத்தத்தில் ஊனமடைந்த இராணுவ வீரர் கோப்ரல் கருணாரத்னவிற்கு வழங்கப்பட்டது. நூலின் 2 வது பிரதி தாயகத்திற்காக உயிர்நீத்த லெப்டினன் கேர்னல் லலித் ஜயசிங்கவின் புதல்விக்கு வழங்கப்பட்டது. மனித நேய நடவடிக்கையின் போது ஊடக பணியாற்றிக் கொண்டிருந்த போது காயமடைந்த ஐரிஎன் ஊடகவியலாளர் சுரங்க பஸ்நாயக்கவுக்கு இந்நூலின் 3 வது பிரதி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.