இலங்கையின் கடல் வளங்களை ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் கூடிய கவனம் செலுத்தப்படுமென விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் தெரிவித்துள்ளார். மல்வத்து அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் விமானப்படை தளபதி இவ்வாறு தெரிவித்தார்.
அஸ்கிரிய பீடத்திற்கு விஜயம் செய்த விமானப்படை தளபதி சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்தார். அதனை தொடர்ந்து மல்வத்து பீடாதிபதி சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். விமானப்படையை நவீனமயமாக மாற்றுவதே தமது பிரதான நோக்கமென விமானப்படை தளபதி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.