தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் தமன்னா
Related Articles
நடிகை நயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில், பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்ற, பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அந்த வரிசையில் முதல் படமாக ஒரு திகிலான நகைச்சுவை கதையின் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட் மற்றும் சின்னத்திரை புகழ் டிஎஸ்கே என பலமான நகைச்சுவை கூட்டணியுடன் தமன்னா களம் இறங்குகிறார்.