தபால் ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு தொடர்பில் இன்றைய தினம் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அமை;சர் ஏ.எச்.எம்.ஹலீம் தெரிவித்துள்ளார். கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து தபால் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை இதற்கு முன்னரும் மத்திய தபால் பரிமாற்ற நிலைய ஊழியர்கள் 48 மணித்தியால வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தனர். அவர்களின் பிரச்சினை குறித்து கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.