ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். ஹாமோஸ் ஜலசந்தி எனப்படும் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படைக்கு அருகில் வந்த ஆளில்லா விமானமே சுட்டு வீழ்த்தப்பட்டது. கடற்படை கப்பலுக்கு ஆயிரம் மீற்றருக்கும் குறைவான தூரத்தில் ஆளில்லா விமானம் நெருங்கி வந்தது.
இதனால் தற்காப்பு கருதி ஈரான் விமானத்தை அமெரிக்க கடற்படையினர் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். நாட்டு நலன்களையும், வீரர்களையும் தற்காத்துக்கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தமது நாட்டின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லையென ஈரான் அறிவித்துள்ளது.