இஸ்ரேல் மற்றும் பஹ்ரேன் வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்துள்ளனர். சந்திப்பு அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் சந்தித்து கலந்துரையாடிய முதற் சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். இஸ்ரேலுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்பட பஹ்ரேன் தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.