இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது
Related Articles
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் Hall of Fame விருது சச்சின் டென்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை பெற்ற வீரர் மற்றும் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற இரு சாதனைகளை டென்டுல்கர் தம்வசம் வைத்துள்ளார். இந்திய அணி பங்குகொண்ட 6 உலகக்கிண்ண தொடர்களில் சச்சின் டென்டுல்கர் விளையாடியுள்ளார். அவருக்கு உலக நாடுகளில் இலட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பல விருதுகளை வென்றுள்ள சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருதான Hall of Fame விருதும் வழங்கப்பட்டுள்ளது.