உயர்தர பரீட்சை அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பம் : தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த மாதம் 4ஆம் திகதி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2019 13:32

உயர்தர பரீட்சை அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பம் : தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த மாதம் 4ஆம் திகதி

இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பரீட்சை ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி நிறைவடைய இருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட உள்ளன. உயர்தர பரீட்சைக்காக இம்முறை புதிய கற்கைநெறி சிபாரிசின் கீழ் 198 229 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.

பழைய பாடத்திட்டத்தின் கீழ் 139 475 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர். பரீட்சைக்காக தோற்ற உள்ள மொத்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 337 704 ஆகும். 2678 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இதே போன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது. சிங்கள மொழியில் 255 529 பேரும் தமிழ் மொழியில் 83 840 பரிட்சாத்திகளும், 2 995 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை 339 369 பரீட்சாத்திகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக தோற்ற இருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2019 13:32

Default