fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அனர்த்த அச்சுறுத்தல் தொடர்ந்தும் : நிவாரண நடவடிக்கைகளும் முன்னெடுப்பு.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2019 13:07

அனர்த்த அச்சுறுத்தல் தொடர்ந்தும் : நிவாரண நடவடிக்கைகளும் முன்னெடுப்பு.

சீரற்ற காலநிலை தொடர்பாக தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிவாரண பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பலத்த மழை மற்றும் பலத்த காற்று தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஒரு சில பகுதிகளில் 150 மில்லி மீட்டரை தாண்டிய மழை பெய்ய கூடுமெனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் காற்றின் வேகமும் அதிகரிக்க கூடும். இதனால் கடற்றொழில் நடவடிக்கைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு மீனவர்கள்கேட்கப்பட்டுள்ளனர். தற்போது கடலுக்கு சென்றுள்ள மீன்பிடி வள்ளங்கள் அண்மையிலுள்ள துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு அனர்த்த நிலைமைக்கும் முகம் கொடுக்க கூடியவாறு நாடு’ பூராகவும் உள்ள இடர் முகாமைத்துவ பிரிவுகள் தயார் நிலையில் உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. அதன் அவசர தொலைபேசி இலக்கம் அமுலில் உள்ளது. விசேடமாக கடற்படையினர் உள்ளிட்ட முப்படையினரும் நிவாரண பணிகளில் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

பலத்த மழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதனால் இரத்தினபுரி நகரை தவிர்த்து மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொது மக்களை கேட்டுள்ளனர். இரத்தினபுரி நகரில் பல வர்த்தக நிலையங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறுக்கு வீதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீரற்ற காலநிலையை தொடர்ந்து கடற் கொந்தளிப்பு காரணமாக அடித்துச் செல்லப்பட்ட ரூமஸ்எல மலையின் பாறைகளுக்கு அருகாமையில் மோதுண்ட கப்பல் காலி வெலிச்சக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் நங்கூரம் இடப்பட்டுள்ளது. கப்பல் மாலுமி சுகையினமுற்றதனால் கடற்படையினர் பாதுகாப்புடன் அவரை கராபபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்திய இன மாலுமியும் அதன் ஊழியர்களாக செயல்பட்ட 8 பேர்களில் 4 இலங்கையர்களும் அடங்குகின்றனர். சீமெந்து போன்ற மூலப்பொருட்களை எடுத்து வந்த போதே கப்பல் விபத்துக்குள்ளாகியது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2019 13:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க