வவுனியா அநுராதபுரம் பிரதான வீதியின் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தும் மேலும் ஐவர் காயமடைந்தும் உள்ளனர்.
அநுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்தஇராணுவ ஜீப் வண்டியொன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. ஜீப் வண்டி வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியுள்ளது. ஜீப் வண்டியில் பயணித்த 3 இராணுவ வீரர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் வீதியில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.