சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2019 14:33

சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

மத்திய மலையக பிரதேசத்தின் மேற்கு சாரலில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த பிரதேசத்தில் கடும் காற்றுடன் மழையும் பெய்து வருகின்றது. இந்த காலநிலையை தொடர்ந்து ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும் அடிக்கடி பனிமூட்ட நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த வீதிகளில் வாகனங்களை செலுத்தும் பொழுது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளை வலியுறுத்தியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2019 14:33

Default