இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்துவதை கைவிடுமாறு தொடர்ந்தும் இராஜதந்திரிகள் வேண்டுகோள்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2019 14:29

இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்துவதை கைவிடுமாறு தொடர்ந்தும் இராஜதந்திரிகள் வேண்டுகோள்

இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்துவதை கைவிடுமாறு தொடர்ந்தும் இராஜதந்திரிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். விரைவில் அதனை நீக்க வேண்டுமென்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்களை சந்தித்த போதே இவ்வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. இன்று முற்பகல் இச்சந்திப்பு இடம்பெற்றது.

மரண தண்டனையை தாங்கள் எப்போதும் எதிர்த்து வருவதாக இச்சந்திப்பின் போது தூதுவர்கள் தெரிவித்தனர். பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா தூதுவர்கள் மற்றும் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிராலயத்தின் இணக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இது தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2019 14:29

Default