fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்த கூடாது : கருணாரத்ன பரனவிதான

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2019 13:42

இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்த கூடாது : கருணாரத்ன பரனவிதான

ஜனநாயக விழுமியங்கள் கொண்ட நாடான இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்த கூடாதென பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவிதான தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“உலகில் எங்கும் மரண தண்டனை அமுல்படுத்தி குற்றங்கள் குறைந்ததாக சான்றுகள் இல்லை. நாட்டின் புகழுக்கு பங்கம் ஏற்படுத்தும் இம்முடிவு திரும்ப பெற வேண்டும். மரண தண்டனையை எதிர்ப்போர் போதைவஸ்து வியாபாரிகளுடன் தொடர்:பு இருப்பதாகவும் அவர்களிடம் பணம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அது போன்ற குற்றச்சாட்டுக்களை எம்மீது சுமத்த வேண்டாமென கேட்டுக்கொள்கின்றோம். ஒரு சில நாடுகளில் ஜனநாயகத்தை துச்சமென மதிக்கும் தலைவர்கள் இருக்கின்றனர். அது போன்ற தலைவர்களை நாம் உதாரணமாக கொள்ள கூடாது. ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர்களை நாம் உதாரண புருஷர்களாக கருதவேண்டும்.”

என குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2019 13:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo