மட்டக்களப்பு ஏராவூர் பிரதேசத்தில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.க
ம்பெரலிய திட்டத்தின் கீழ் சுமார் 20 இலட்சம் ரூபா நிதியில் ஏராவூர் ஏ.கே.எம்.வீதியை கொங்றீட் பாதையாக புனரமைப்;பு செய்யும் பணிகள் முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர அலி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பிராநதிய அமைப்பாளர் எம்.எல்.ஏ.லத்தீப் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நகர சபை தவிசாளர் அப்துல் வாசித், பிரதேச சபை செயலாளர் வி.யூசுப் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 10 இலட்சம் ரூபா செலவில்ஏராவூர் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் நிருவாக கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.